உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதுர்மாஸ்ய விரதம் வரும் 16ல் துவக்கம்

சாதுர்மாஸ்ய விரதம் வரும் 16ல் துவக்கம்

சென்னை: சென்னையில், காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதத்தை, வரும், 16ம் தேதி துவக்குகிறார். சென்னை, ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள, ஆஸ்தீக சமாஜத்தில், 16ம் தேதி, வியாச பூஜை செய்து, சாதுர்மாஸ்ய  விரதத்தை, விஜயேந்திரர் துவக்கி, செப்., 14ம் தேதி நிறைவு செய்கிறார்.இதையொட்டி, தினமும், ஆஸ்தீக சமாஜத்தில், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், உபன்யாசங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.  மேலும், ஆக., 3ம் தேதி,  ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரி பூஜை, 15ம் தேதி, ஆவணி அவிட்டம், 16ம் தேதி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி, 23ம் தேதி, கோகுலாஷ்டமி, செப்., 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !