உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆனித்தேரோட்டம்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆனித்தேரோட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கோயிலில் ஆனி திருவிழா ஜூலை 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் 5ம் நாளை முன்னிட்டு பூப்பல்லக்கு மற்றும் கழுவன் விரட்டும் நடந்தது. எட்டாம் திருநாளை முன்னிட்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்.

மாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர் வடத்தை பக்தர்கள் இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது. பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். தேர்களுக்கு முன் பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்தினர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தினர் செய்திருந்தனர். பத்தாம் நாளான இன்று பகல் 12:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !