பெரியநாயக்கன்பாளையம் அருகே பாபாவுக்கு குரு பூர்ணிமா விழா
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் ஷீரடி சாய் பைரவர் கோவில் உள்ளது. குரு பூர்ணிமா விழாவையொட்டி இக்கோவிலில் நாளை 16 ல் , நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை, 6.30 மணிக்கு காலை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து, காலை, 7.30 மணி முதல், 8.30 மணி வரை சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. சாய் சந்திரசேகரின் ஸ்தவன மஞ்சரியும், சாயி நாமாவளி அஷ்டோத்திரமும் நடக்கிறது. காலை, 10.30 மணிக்கு சாய் லட்சார்ச்சனையும், பகல், 12.45 மணிக்கு பகல் ஆராதனை நடக்கிறது. மதியம், 2.30 மணிக்கு ஸ்ரீ ஹரிஹரசுதன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.மாலை, 6.30 மணிக்கு சத்தியநாரா யண பூஜையும், 6.45 மணிக்கு பல்லக்கில் சாயிபாபாவின் ஊர்வலம் நடக்கிறது. இரவு, 8.00 மணி க்கு இரவு ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோவில் நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் நடந்து வருகிறது.