உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் வந்த, விவேகானந்தர் ரத யாத்திரைக்கு வரவேற்பு

சேலம் வந்த, விவேகானந்தர் ரத யாத்திரைக்கு வரவேற்பு

சேலம்: சேலம் வந்த, சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரையை, திரளான பக்தர்கள் வரவேற்று, தரிசனம் செய்தனர். சேலம், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை வீதி உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை., 14ல்) மாலை, சேலம் வந்த ரதத்தை, காசி ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின், பிரமதேஷானந்தஜி மகராஜ், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

தொடர்ந்து, ரதத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், ரதத்தை வரவேற்று, தரிச னம் செய்தனர். தொடர்ந்து நடந்த சொற்பொழிவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கோபால கிருஷ்ணன், இன்று 15ம் தேதி காலை, ரத யாத்திரை சுற்றுப்பயணத்தை தொடங்கிவைக்கிறார். வரும், 25 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், முக்கிய ஆன்மிக தலங்கள், கல்வி நிறுவனங்கள், முக்கிய வீதிகளில், வீதி உலா வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !