காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரத்தில் தேன் கூடு
ADDED :2277 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரத்தில் உள்ள தேன் கூட்டால், பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும், அத்திவரதர் வைபவத்தையொட்டி, தற்போது, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவில் ராஜகோபுரத்தின் வடக்கு திசையில் உள்ள முதல் நிலையில், தேனீக் கள் கூடு கட்டி வருகின்றன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எதிர்பாராதவிதமாக, தேன் கூடு கலைந்தால், கோவிலுக்கு வரும் பக்தர்களை, தேனீக்கள் கொட்டும் அபாயம் உள்ளது. எனவே, தேன்கூடு சிறிய அளவில் இருக்கும்போதே அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.