உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் ஆனந்த சாய்ராமிற்கு பால்குட அபிஷேகம்

திருவள்ளூர் ஆனந்த சாய்ராமிற்கு பால்குட அபிஷேகம்

திருவள்ளூர்:சம்வஸ்திர அபிஷேக விழாவை முன்னிட்டு, ஆனந்த சாய்ராமிற்கு பால்குட அபிஷேகம் நடந்தது.

திருவள்ளூர், பெருமாள் தெருவில் உள்ள ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், குரு பூர்ணிமா மற்றும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க சம்வஸ்திர அபிஷேக விழா நேற்று (ஜூலை., 15ல்) துவங் கியது.

இதையடுத்து, வேம்புலி அம்மன் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் துவங்கியது. காலை, 5:30 மணி அளவில் ஆனந்த சாய்ராமிற்கு, பால்குட அபிஷேகம் நடந்தது. இன்று (ஜூலை., 16ல்), காலை மகாலட்சுமி ஹோமம், சங்காபிஷேகம் நடக்கிறது.மாலை, சாயி சத்ய நாராயண பூஜை நடைபெறுகிறது.நாளை (ஜூலை., 17ல்), காலை ஸ்தவன மஞ்சரி பாராயணம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !