உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமபாளையத்தில் சமணர் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை

உத்தமபாளையத்தில் சமணர் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை

உத்தமபாளையம்:கி.மு. 2 ம் நுாற்றாண்டில் சமண மதத்தை தோற்றுவித்த மகாவீரரின் வழித் தோன்றல்கள் தெற்கு பகுதிக்கு வந்தனர். தமிழகத்தில் நாகமலைபுதுக்கோட்டை, உத்தம பாளையம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை விட்டுசென்றுள்ளனர்.

உத்தமபாளையம் கருப்பணசாமி கோயில் மலையடிவாரத்தில் பாறையில் சமணர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் வழித்தோன்றல்களில் திகம்பரர்கள், சுவதேம்பரர்கள் என்று இரு பிரிவுகளாக இருந்துள்ளனர். இதில் திகம்பரர்கள் கல்வி, மருத்துவம் பார்ப்பதன் மூலம் சமண மதத்தை பரப்பியுள்ளனர். குகைகளில் தங்கும் இவர்கள், அருகில் பாறைகளில் சிற்பங்களை செதுக்கி வழிபடுவது வழக்கம்.

அவ்வாறு செதுக்கப்பட்ட சிற்பங்கள் தான் உத்தமபாளையத்தில் உள்ளது. கடந்த 27 ஆண்டு களுக்கும் முன்பாக மத்திய தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித்துறை, சமண சிற்பங் களை கையகப்படுத்தி பாதுகாத்து வருகிறது. போர்டை மட்டும் அந்த இடத்தில் வைத்துள்ளது.

தற்போது அங்கு சமண சிற்பங்கள் சேதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவற்றை சேதப்படுத்தாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !