திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையம் மகா கும்பாபிஷேகம்
ADDED :2278 days ago
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையம் சத்யயுகசிருஷ்டி கோயிலிலுள்ள ஸ்ரீ பஹூளாதேவி மஹரிஷி ஸ்ரீ காகபுஜண்டர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூலை 14 முதல் யாகசாலை பூஜை, மகாகணபதிஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, தீபாரதனை நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜையில் விநாயகர் வழிபாடு, மகாதேவர் வழிபாடு, வேத பாராயணம், திருமுறை, பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று (ஜூலை., 15ல்) காலை 7:00 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பூஜை, மகாபூர்ணா ஹூதி நடந்தன. பின் கலசம் புறப்படாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
முக்தி நிலைய தலைவர் ஸ்ரீவசந்தசாய் தலைமையில் பெரியகோட்டை தெக்கூர் கைலாச நாதர் கோயில் ஆபத்தோத்தாரண குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தினார்.