உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

கோத்தகிரி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

கோத்தகிரி:கோத்தகிரி கன்னேரிமுக்கு சந்தான வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 15ல்) நடந்தது.

விழாவையொட்டி, 12ம் தேதி பகவத் அனுக்ஞை, ஆச்சார்யா சங்கல்பம், வாஸ்து ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முதற்காரணம் ஆரம்பம், பகவத் அனக்ஞை சங்கல்பம், பூமி பூஜை மற்றும் மகா சுதர்சன ஹோமம் நடந்தது.

மாலை, 4:45 மணிக்கு மேல், இரண்டாம் காலம் ஆரம்பம், பாலிகா ஸ்தானம், கலாகாஷனம் கும்பங்கள் பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, (ஜூலை., 15ல்) காலை, 4:30 மணிக்கு, மஹா பூர்ணாகுதி மற்றும் கடம் புறம்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு, மகாஸம்ரோக்ஷனம் மற்றும் ஆச்சாரியார் மரியாதை மங்களம் நடந்தது. காலை, 11:00 மணி க்கு, கோவில் பூசாரி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கோத்த கிரி கன்னேரிமுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !