உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது.கப்பியாம்புலியூர் முத்துமாரியம்மன் கோவிலில், மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் செல்வகணபதி, பாலமுருகன் கோவில்கள் பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 13ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. 14ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந் தன மருந்து சாற்றுதல், தீபாரதனை நடந்தது.நேற்று 15ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜை முடிந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:20 மணிக்கு, விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் ராஜகோபுரம் மூலவர் விமானம் கோபுர கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !