வானுார் அருகே கோணிக்கட்டி சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2273 days ago
வானுார்:வில்வநத்தம் கிராமத்தில் கோணிக்கட்டி (ஜீவ சமாதி) மகாயோக ஸ்ரீமத் ஞானப்பிரகாச சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 15ல்) நடந்தது.
அதனையொட்டி, கடந்த 13ம் தேதி மாலை மூத்த பிள்ளையார் விழிபாடு நடந்தது. தொடர்ந்து முதல்கால வேள்வியும், நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால வேள்வியும், மாலை மூன்றாம் கால வேள்வியும் நடந்தது.நேற்று 15ம் தேதி காலை நான்காம் கால வேள்வியும், 6:00 மணிக்கு திருவருள் ஏற்றமும், நிறையவி, திருமுறை விண்ணப்பம், யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, 7:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் 20ம் பட்டம் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.