ஸ்ரீவில்லிபுத்தூர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்
ADDED :2310 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சன்னிதியில் சாதுர்மாஸ்ய விரதம் துவக்க விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று (ஜூலை., 16ல்) காலை 9:00 மணிக்கு மணவாளமாமுனிகள், ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து ஸ்ரீசடகோப ராமனுஜ ஜீயர் சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார்.
கோயில் செயல் அலுவலர் இளங்கோவலன், வாசுதேவபட்டர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலர் சரவணகார்த்திக், ஸ்தானிகம் ராமேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்று ஜீயரிடம் ஆசி பெற்றனர்.