உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கச்சிமடத்தில் சந்தியாகப்பர் சர்ச் விழா கொடி ஏற்றம்

தங்கச்சிமடத்தில் சந்தியாகப்பர் சர்ச் விழா கொடி ஏற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மும்மதத்தினரும் வழிபடும் புனித  சந்தியாகப்பர் சர்ச்சில் நேற்று (ஜூலை., 16ல்) திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

தங்கச்சிமடம் வேர்காடு கிராமத்தில் உள்ள சந்தியாகப்பர் சர்ச்சில் 477ம் ஆண்டு திருவிழாவை யொட்டி நேற்று (ஜூலை., 16ல்) சர்ச் முன்பு உள்ள கொடி கம்பத்தில்  ராமநாதபுரம் மறை வட்ட அதிபர் அருள் ஆனந்த் கொடி ஏற்றி திருவிழாவை  துவக்கினார். பின் சர்ச்சில் நடந்த  திருப்பலி பூஜையில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர். இன்று (ஜூலை., 17) முதல் ஜூலை 24 வரை சர்ச் வளாகத்தில் நவநாள் சிறப்பு திருப்பலி பூஜை நடக்கும். ஜூலை 24ல் சர்ச்சில் சிறப்பு திருப்பலி பூஜை, அன்றிரவு சந்தியாகப்பரின் தேர்பவனி நடக்கிறது.

பிரசித்த பெற்ற இந்த திருவிழாவில்  கிறிஸ்தவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர்  பூபதி ஆரோக்கியராஜன் தலைமையில் தண்ணீர் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா  கிராம நிர்வாகிகள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !