அத்திவரதர் தரிசனம்: லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க லட்சகணக்கான மக்கள் குவிந்ததால், காஞ்சிபுரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி முதல், விமரிசையாக நடக்கிறது .தினமும், ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். 18ம் நாளான இன்று(ஜூலை 18) கத்தரிப்பூ பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று (ஜூலை 17) சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலை முதல் லட்சகணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க திரண்டுள்ளனர். இதனால், காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தம்மபேட்டை - வாலாஜாபாத் - காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கி.மீ., தூரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.