உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் அனுமான் தீர்த்த குளத்தில் இளைஞர்கள் துப்புரவு பணி

ராமேஸ்வரத்தில் அனுமான் தீர்த்த குளத்தில் இளைஞர்கள் துப்புரவு பணி

ராமேஸ்வரம் : ராமாயணத்தில் அனுமான் சிவலிங்கம் கொண்டு வர தாமதம்  ஆனதால், சீதை மணலில் சிவலிங்கம் உருவாக்கி பூஜை செய்தார்.  ஆத்திரமடைந்த அனுமான் தன் வாலில் சீதை உருவாக்கிய லிங்கத்தை கட்டி  இழுத்த போது, வால் அறுந்து அப்பகுதியில் ரத்தம் குளம் போல் தேங்கியது.  இதுவே அனுமான் தீர்த்தமாக மாறியது. இங்கு பக்தர்கள் நீராடினால் துணிச்சல்,  தன்னம்பிக்கை வரும் என்பது ஐதீகம். ராமாயணத்தில் தொடர்புடைய இத்தீர்த்த  குளம் ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகில் உள்ளது.

தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அனுமான் தீர்த்தத்தில் முட்புதர்கள்,  செடிகள் அடர்ந்தது. இதனை விவேகானந்தா கேந்திரா நிர்வாகி சரஸ்வதி,  ராமேஸ்வரம் மருத்துவ குல சங்க நிர்வாகிகள் சேதுமுருகன், எம்.எம்.முருகன்  உட்பட ஏராளமான இளைஞர்கள் புதர், குப்பையை அகற்றி அனுமான் தீர்த்த  குளத்தை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !