உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் தென் திருமலையில் தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம் தென் திருமலையில் தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம் : காரமடையை அடுத்த ஜடையம்பாளையத்தில்  தென்திருமலை வெங்க டாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆடி  மாதப்பிறப்பையொட்டி, தட்சிணாயன புண்ணிய கால வைபவம் துவங்கியது.

நேற்று (ஜூலை., 17ல்) காலை சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு விஸ்வ ரூப தரிசனம், தோமால சேவை, சகஸ்ரநாமார்சனை, நிவேதனம், சாற்றுமுறை ஹாரத்தி ஆகிய ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை மங்கள வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். பின் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தேர் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு  அருட்காட்சியளித்தார். பின்பு ஹாரத்தி, ஏகாந்த சேவையுடன் விழா  நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !