உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா: ஜூலை 24 ல் துவக்கம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா: ஜூலை 24 ல் துவக்கம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்  திருவிழா ஜூலை 24ல் துவங்குகிறது.திருவாடானையில் சிநேகவல்லிஅம்மன்  உடனுறை ஆதிரெத்தினேஸ் வரர் கோயில் உள்ளது.

இக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 24ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.  

மறுநாள் காலை 9:30 மணிக்கு கொடியேற்றமும், விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக ஆக.,2ல் தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் தீர்த்தோற்ஸவம், யாக  கும்பாபிஷேகமும், ஆக.,4 ல் அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும், 7 ல்  சுந்தரர் கயிலாய காட்சியும் நடைபெறும்.

விழா நாட்களில் கேடகம், பல்லக்கு, காம தேனு, அன்னம், கிளி, கமலம், குதிரை போன்ற வாகனங்களில் சிநேகவல்லிஅம்மன் வீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ் தான செயல் அலுவலர் புவனேஸ்குமார் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !