கருப்பசாமி கோயிலில் ‘ஆடி பூஜை’
ADDED :2383 days ago
குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சி வேர்ப்புளியில் உள்ள பெரியகருப்பசாமி கோயிலில் ஆடி பூஜை விழா நடந்தது. ஆடி மாதம் முதல் வியாழக்கிழமையான நேற்று மதியம் 12:00 மணியளவில் நடந்த உச்சி பூஜை விழாவில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாக்களை வெட்டி, சமைத்து பகல் முழுவதும் அன்னதானம் நடந்தது. பத்து ஊர் பொது மக்கள் மற்றும் திருப்பணி குழு நண்பர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.