மழை வேண்டி ஏரிக்கரையில் பொங்கல்
ADDED :2383 days ago
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லுாரில், பருவமழையை வரவேற்று ஆண்டு தோறும் ஆடி மாதம் துவங்கும் முன் ஏரிக்கரையில் பொங்கல் வைத்து கிராமத்தினர் வழிபடுகின்றனர். அங்குள்ள வேப்ப மரத்துக்கு புதுத்துணி அணிவித்து மழை வேண்டி குறி கேட்கும் பழக்கமும் உள்ளது.