திண்டிவனம் செங்கழுநீரம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்ஸவம்
ADDED :2321 days ago
திண்டிவனம்:ஒட்டம்பாளையம் சேரடி செங்கழுநீரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடந்த 30ம் தேதி விழா துவங்கியது. விழாவையொட்டி, தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 16ம் தேதி அம்மனுக்கு கூழ்வார்த்தல், செடல் உற்சவம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் அலகு குத்தியும், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக் கடனை செலுத் தினர்.நேற்று முன்தினம் (ஜூலை., 17ல்) இரவு காத்தவராயன் - ஆரியமாலாவுக்கு திருக்கல்யாண மும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.