சங்கராபுரத்தில் மழை வேண்டி குத்துவிளக்கு பூஜை
ADDED :2266 days ago
சங்கராபுரம்:மழை மற்றும் மக்கள் நலன் வேண்டி தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் குத்து விளக்கு பூஜை நடந்தது.நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அன்பழகன் வரவேற்றார். ரவி குருக்கள், கார்த்திகேய குருக்கள் முன்னிலையில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் நடந்த குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேவபாண்டலம் பொதுமக்கள் செய்திருந்தனர்.