உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் மண்டல பூஜை

வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் மண்டல பூஜை

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் மண்டல பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வடமதுரை விருந்தீ ஸ்வரர் கோவில் நுாற்றாண்டு பழமை மிக்கது. சிதிலமடைந்திருந்த இக்கோவில் புனரமைக் கப்பட்டு விருந்தீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன், பெருமாள், அனுமன், சனீஸ்வரன், காலபைரவர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன.

இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 11ம் தேதி விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை அடுத்த மாதம், 28ம் தேதி வரை நடக்கிறது.இது தொடர் பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், மண்டல பூஜைக்கான பதிவு தினமும், காலை, 10.00 மணி முதல் பகல், 12.00 மணி வரையும், மாலை, 5.00 மணி முதல், இரவு, 8.00 மணி வரையும் நடைபெறும். பதிவு செய்த உபயதாரர்கள் காலை, 10.00 மணிக்கு பூஜைக்கு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு வரிசைப்படி உபயதாரர்கள் அமரவைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். பூஜையில் பங்கேற்கும் உபயதாரர்களுக்கு, வஸ்திரம் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரசாதம் ஆகியவை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !