உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் ஆடி கிருத்திகை:திருத்தணிக்குசிறப்பு ரயில்கள்

சென்னையில் ஆடி கிருத்திகை:திருத்தணிக்குசிறப்பு ரயில்கள்

சென்னை: ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து, திருத்தணிக்கு, 24ம் தேதிமுதல், 28ம் தேதி வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, காலை, 8:20 மணி, காலை, 11:05 மணிமற்றும் மதியம், 12:50 மணி மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், காலை, 11:00 மணி, மதியம், 1:20 மணி மற்றும் மாலை, 3:10 மணிக்கு திருத்தணி சென்றடையும்.திருத்தணியில் இருந்து, காலை, 11:30 மணி, மதியம், 1:30 மணி மற்றும் மாலை, 3:20 மணிக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், மதியம், 1:50 மணி, மாலை, 3:45 மணி மற்றும் மாலை, 5:40 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !