சூலுாரில் 55 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை
ADDED :2320 days ago
சூலுார்:தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத்தின் சூலுார் ஒன்றிய செயற்குழு கூட்டம், மாவட்ட துணைத்தலைவர் சசிக்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ண குமார் வரவேற்றார். மண்டல தலைவர் வக்கீல் விஜயகுமார், தீர்மானங்களை விளக்கி பேசினார்.செப்., 2ம் தேதி நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, சூலுார் ஒன்றியத்தில், 55 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்துவது எனவும், கிருஷ்ண ஜெயந்தி யன்று, 10 இடங்களில் விழா நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.