உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயி ல்களில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான  பக்தர்கள் தரிசித் தனர்.

வீரபாண்டி கவுரி மாரியம்மன் கோயில், தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயில், கணேச கந்தபெருமாள் கோயில்களில், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

போடி: போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபி ஷேகம், காய்கனி அலங்காரம், தீபாராதனை நடந்தது. மழை வேண்டி அம்மனுக்கு  கூழ்காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

* பத்திரகாளிபுரம், பத்திரகாளியம்மன் கோயில், போடி அருகே மலைமீதுள்ள  வடமலை நாச்சியம்மன் கோயில், குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன்,  புதுக்காலனி ஆதி பராசக்தி கோயிலில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

கூடலூர்: கூடலூர் சுந்தரவேலர் கோயிலில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சர்வ  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடி வெள்ளி முதல் வாரத்திற்கான சிறப்பு பூஜை,  ஆராதனை நடந்தது.

சுருளிமலை பழநிமலை பெண்கள் பாதயாத்திரை குழுவினர் பஜனைப் பாடல்கள்  பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.

*கூடலூர் துர்க்கையம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், காளியம்மன்  கோயில், பகவதியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி  வழிபட்டனர். பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது.

*பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன்
கோயில், திரவுபதி அம்மன், அழகுநாச்சியம்மன் கோயில் உட்பட பெரியகுளம்  தென்கரை, வடகரை மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் 20 க்கும் அதிகமான அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !