தடைகள் அகற்றும் எழுந்து நிற்கும் நந்தி!
ADDED :2364 days ago
கோயில்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நின்ற கோலத்தில் உள்ளது. ஏன் தெரியுமா? சிவபெருமானின் நண்பரான சுந்தரருக்காக அவரது காதலியிடம் துாது சென்றார் சிவன். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல் நடந்தே போனார். இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவனை நடக்க விடுவது கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தது. இதுவே இங்கு நின்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.