திண்டுக்கல்லில் புதிய சிவன் சிலை
ADDED :2266 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயிலில் ஆசியாவிலேயே உயரமான 32 அடி உயர விநாயகர் சிலை உள்ளது.
இதுமட்டுமின்றி 108 விநாயகர் சிலைகளும் உள்ளன. இங்கு திருவோலை சீட்டின் உத்தரவின் படி, சிவன் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவானது.எனவே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இத்தாலி மார்பிள் கல்லில் 11 அடி சிவன் சிலை செய்யபட்டது.
இது ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிலை, இதன் மதிப்பு ரூ. 15 லட்சம். நேற்று (ஜூலை., 22ல்) ஜெய்பூரில் இருந்து லாரி மூலம் புறப்பட்டது. ஜூலை 31 சிலை கோயிலை வந்தடையும். பின்னர் பிரதிஷ்டை செய்யப்படும் என நிர்வாகி மருதநாயகம் கூறினார்.