உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருகே ரங்கநாதர் கோவிலில் சிறப்பு ஹோமம்

செஞ்சி அருகே ரங்கநாதர் கோவிலில் சிறப்பு ஹோமம்

செஞ்சி:சிங்கரவம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவத்தையொட்டி முன்னிட்டு  சிறப்பு ஹோமம் நடந்தது.கோவிலில் மூன்று நாள் பவித்ரோற்சவம் கடந்த 22ம்  தேதி துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக நேற்று (ஜூலை., 23ல்) காலை 8:00 மணிக்கு  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு பவித்ரமாலை சாற்றி இரண்டாம் கால  யாகமும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகமும் நடந்தது.

இன்று 24ம்  தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 12:00 மணிக்கு மகா  தீபாரா தனையும் நடக்கிறது. பூஜைகளை மது பட்டாச்சாரியார் தலைமையிலான  குழுவினர் செய்தனர். உபயதாரர் திருப்பதி அரவிந்தன் மற்றும் கிராம பொது  மக்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !