உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோவில் திருவிழா

விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோவில் திருவிழா

விழுப்புரம்:விழுப்புரம் அருகே குப்பம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில்  19ம் ஆண்டு திருவிழாவையொட்டி, பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குப்பம் கிராமத்தில் பொற்கலை, பூரணி சமேத அய்யனாரப்பன் கோவிலில் 19ம்  ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காலை  7:00 மணிக்கு அய்யனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை  நடந்தது.தொடர்ந்து, 8:00 மணிக்கு தீபாராதனை, மதியம் 1:00 மணி க்கு  அன்னதானம், இரவு 7:00 மணிக்கு அய்யனாரப்பன் சுவாமி, பொற்கலை, பூரணி  சமேத மாக பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்,  சிறப்பு அலங்காரத்தோடு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !