தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
தேனி: ஆடி 2 வது வெள்ளிக்கிழமையை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி கணேசகந்த பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வர், தேனி வாரச்சந்தை கவுமாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரியகுளம்:பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், திரவுபதிஅம்மன், அழகுநாச்சியம்மன் கோயில் உட்பட தென்கரை, வடகரை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் 20க்கும் அதிகமான அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலையில் இருந்தே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.