உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

 மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 23 ம் தேதி பூச்சாட்டுடன் ஆடிக்குண்டம் விழா துவங்கியது.


நான்காவது நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் உற்சவ அம்மனுக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு அம்மன் சுவாமி முன்பு ஏகதின தமிழ் முறை லட்சார்ச்சனை துவங்கியது. பீடம் பொன்மணி வாசக அடிகளார் லட்சார்ச்சனையை துவக்கி வைத்தார். சிறுமுகை மூலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் லட்சார்ச்சனையை நடத்தினர்.சிரவை ஆதீனம் ஓதுவார்கள் ஜெகநாதன், கங்காதர தேசிகர், பேரூராதீனம் ஓதுவார் குமார் ஆகியோர் இதில் பங்கேற்று லட்சார்ச்சனையை செய்தனர். சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !