வீரமாகாளி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளி
ADDED :2320 days ago
கமுதி : கமுதி தெற்கத்திய நாடார் பங்காளிகள் சங்கத்திற்கு பாத்தியமான குலதெய்வ கோயிலான வீரமாகாளியம்மன் கோவிலில்15ம் ஆண்டு இரண்டாவது ஆடி வெள்ளி உற்ஸவம், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், வேப்பிலை சகிதமாக அம்மனை வழிபட்டனர். பூஜைகள் முடிந்து, பக்தர்களுக்கு வெல்ல கட்டியுடன் கேழ்வரகுகூழ் பிரசாதம் வழங்கபட்டது.பூஜைகளை செந்துார்கந்தசாமி செய்திருந்தார். அன்னதானத்தைபுதுச்சேரி வக்கீல் தண்டபானிகுடும்பத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமுதி தெற்கத்திய நாடார் பங்காளிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.