உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் உண்டியல் திறப்பு

அழகர்கோவில் உண்டியல் திறப்பு

அலங்காநல்லுார் : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலின் உண்டியல்கள் திருக்கல்யாண மண்டபத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் 23,67,554 ரூபாய் ரொக்கபணம், தங்கம் 75 கிராம், வெள்ளி 1115 கிராம் இருந்தன. இக்கோயிலின் துணை கோயிலான தல்லாகுளம் பெருமாள் கோயில் உண்டியல்களில் 4,18,716 ரூபாய் ரொக்கபணம், தங்கம் 9 கிராம், வெள்ளி 68 கிராம் இருந்தன. வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.உண்டியல் எண்ணும் பணியில் ஐயப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !