முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட விழா
ADDED :2320 days ago
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில் உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், இந்தாண்டு ஆடித்தேர் திருவிழா, நேற்று காலை, 9:00 மணிக்கு, பால்குட விழாவுடன் துவங்கியது.இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், அப்பகுதி அகத்தீஸ்வரன் கோவில் குளத்திலிருந்து, பால்குடங்களுடன் புறப்பட்டனர். பக்தர்கள், ஆதிபராசக்தி, முத்துமாரியம்மா... என, கோஷங்கள் எழுப்பி, பால்குடங்களை சுமந்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.