உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

தியாகதுருகம் : வடதொரசலுார் கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. கடந்த 19ம் தேதி காப்புகட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !