உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பால் காவடி ஊர்வலம் நடந்தது. தனையொட்டி, நேற்று காலை 9:30 மணிக்கு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், சுப்ரமணியர் ஆவாகனம், கடம் புறப்பாடாகி, வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு பால்குட அபிஷேகம், கலசாபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபசார தீபாராதனையுடன் எழுந்தருளி, ஆலய வலம் வந்து, மகா அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சங்கராபுரம்பூட்டை மாரியம்மன் கோவில், பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், சங்கராபுரம் முதல்பாலமேடு புற்று மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !