மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED :2320 days ago
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.