காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
மோகனூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 11:00 மணிக்கு, நறுமண பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு, அபி ஷேகம், ஆராதனை நடந்தது.
* மோகனூர், சுப்ரமணியபுரம் குறிக்காரசாமி சுவாமி கோவிலில் உள்ள காமாட்சி அம்மனுக்கு, வளைகாப்பு நடந்தது. சுவாமி, தங்க கவசத்தில் எழுந்தருளினார்.
* நாவலடியான் கோவில், காளியம்மன் கோவில், அசலதீபேஸ்வரர் கோவில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் என, சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில், சிறப்பு அபி ஷேகம், ஆராதனை நடந்தது.
* குமாரபாளையம், கோட்டைமேடு காளியம்மன், சவுண்டம்மன், மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன், அம்மன் நகர் ஐயப்பன் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. ராஜா வீதி காளியம்மன் கோவிலில் அம்மன் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.