ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2408 days ago
நாமக்கல்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில், நேற்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. தொடர்ந்து, சங்காபி ஷேகம், வெள்ளி கவசம் சாற்றப்பட்டு, தங்கக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதே போல், உற்சவர் பாலதண்டாயுதபாணி, வள்ளி தெய்வானையுடன் வெண் பட்டு உடுத்தி கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* நாமக்கல், கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசத்தில், ராஜ அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.