சொர்ண நாச்சியார் கோயிலில் ஆடி உற்ஸவ விழா
ADDED :2267 days ago
தேவகோட்டை : தேவகோட்டை ராம் நகரில் உள்ள சொர்ண நாச்சியார் கோயிலில் ஆடி உற்ஸவம் ஜூலை 19 அன்று காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. முளைக்கொட்டு, திருவிளக்கு பூஜைகள் நடத்தினர். நிறைவு நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர்.அம்மனுக்கு பூக்களை சொரிந்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.