ரேணுகாதேவி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
ADDED :2266 days ago
காஞ்சிபுரம் : கோட்ராம்பாளையம் ரேணுகாதேவி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், கோட்ராம்பாளையம் பகுதியில், ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில், ஆடித்திருவிழா, ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா, நேற்று காலை, அம்மை, அப்பன் அலங்காரத்தில், சுவாமி வீதியுலா நடைபெற்றது.தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, கோவிலில் கூழ்வார்த்தல், மதியம், 2:00 மணிக்கு அப்பகுதி மக்கள், ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.இரவு, ரேணுகாதேவி அம்மன், வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.