உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் செடல் திருவிழா

பாலமுருகன் கோவிலில் செடல் திருவிழா

திண்டிவனம்: தீர்த்தக்குளம் பாலமுருகன் கோவிலில், ஆடிகிருத்திகை திருவிழா நடந்தது.திண்டிவனம் தீர்த்தகுளத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. தொடர்ந்து நடந்த செடல் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி, வாகனங்கள் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !