குறிக்கார சுவாமிக்கு பாலாபிஷேகம்
ADDED :2264 days ago
மோகனூர்: மோகனூர் சுப்ரமணியபுரம், குறிக்கார சுவாமிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்துக் கொண்டு,முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதையடுத்து, சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.