மாறுது அத்திவரதர் கோலம்: தரிசனத்தில் மாற்றம்
காஞ்சிபுரம் ; அத்திவரதர் தரிசனம் வரும் ஜூலை 31, புதன் கிழமை மாலை 5 மணி வரை தான் என்றும் அதன் பின்னர் நின்றகோலத்தில் அத்திவரதர் காட்சி தருவதற்கான பணிகளுக்காக தரிசனம் நிறுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை 1 முதல் அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அவரைக்காண குவிந்து வருகின்றனர். இதுவரை 42 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்திருப்பதாக கூறுகின்றனர்.
இதுவரை சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டி இருப்பதால், வரும் ஜூலை 31 அன்று மட்டும் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி தரப்படுகிறது. பின்னர், ஆக1 முதல் அத்திவரதரின் நின்றகோல தரிசனம் தொடரும். அதாவது, ஜூலை 31 அன்று 12 மணி வரையில், தரிசன பாஸ் பெற்றவர்கள், 3 மணி வரையில் விஐபி தரிசனம், மாலை 5 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.