சதுரகிரியில் நுழைவு கட்டணம் கூடாது
மதுரை : சதுரகிரி மலையில் நுழைவு வாயில் கட்டணம் வசூலிக்க கூடாது, என, மதுரையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.இயக்க மாநில தலைவர் சுடலைமணி கலெக்டர் ராஜசேகரிடம் அளித்த மனுவில் கூறியதாவது: சதுரகிரி மலைக்கு நுாற்றாண்டு காலமாக அமாவாசை, பவுர்ணமி மட்டுமின்றி பிரதோஷம் நேரம் உள்ளிட்ட மற்ற நாட்களிலும் பக்தர்கள் சென்று தரிசிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகம் செல்வர். அந்த நாட்களில் செல்ல முடியாதவர்கள் மற்ற நாட்களில் செல்வர். தற்போது வனத்துறையினர் மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எல்லா நாட்களிலும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சதுரகிரி மலையில் துப்பரவு பணியை ஹிந்து அறநிலையத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். அரசின் அம்மா குடிநீரை மலையடி வாரத்தில் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.