பழநியில் பல்லாயிரம் ஆண்டு ’கல்திட்டை’ கண்டுபிடிப்பு
பழநி : பழநி அருகே ஆயக்குடி பொன்னிமலைப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ’கல்திட்டை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழநி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் எம்.பி., ராஜா ரவிவர்மா, பழநி யாண்டவர் கலை -பண்பாட்டு கல்லுாரி பேராசிரியர் அசோகன், ஆய்வு மாணவர்கள் திருவேங் கடம், செல்வராஜ் ஆகியோர் ஆயக்குடி பொன்னிமலை கரட்டுபகுதியில் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டனர். அதில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ’கல்திட்டை’ கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது. நாராயணமூர்த்தி கூறுகையில், ”ஆயக்குடி தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை யின் ஒரு பகுதி பொன்னிமலைகரடு. இதன் அடிவாரப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அமைக் கப்பட்ட ’கல்திட்டை’ கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக 3ஆயிரம் ஆண்டுகள் வரை பெருங்கற்காலம் என்று அழைக்கிறோம். அக்காலத் தில் வாழ்ந்து இறந்து போனவர்களின் நினைவாக பெரிய பாறைக்கற்களை கொண்டு
நினைவுச் சின்னம் அமைக்கும் பழக்கம் உலகம் முழுவதும் இருந்துள்ளது. அம்மாதிரியான நினைவுச்சின்னம் தான் பொன்மலை கரடு கல்திட்டை.ஒரு பாறையின் மீது இரண்டு உருண்டையான பாறாங்கற்களை வைத்து, அதன்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்துள் ளனர். சுமார் 5 டன் எடையுள்ள இந்தப்பாறையின் அமைப்பு வியப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நினைவுச்சின்னம் ஆஸ்திரேலியா ’ஊரு’ என்ற இடத்திலும் கண்டுபிடித் துள்ளனர்.
ஊரு என்பது தமிழ்ச்சொல், அங்குள்ள பழங்குடி இனத்தவர்களின் மொழியும் தமிழ் மொழியை ஒத்துள்ளது. அங்கு அகழாய்வுகளில் புதை குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் 75 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது , என்கின்றனர். அதன்படி பார்த்தால் ஆயக் குடி சின்னத்தின் காலத்தையும் 30 முதல் 40 ஆயிரம் ஆண்டு என கணிக்கலாம். எதற்கு எடுத் தாலும் 2 ஆயிரம், 3 ஆயிரம் என கணக்கிடாமல் அறிவியல் முறைப்படி பழங்கால சின்னங் களை ஆய்வு செய்து காலத்தை கணிக்க வேண்டும். அப்போது தமிழ்மொழியின் தொன்மை யை 80ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எடுத்து செல்லமுடியும்,” என்றார்.