உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்து மதம் ஒப்பற்றது: பூஜாரிகள் மாநாட்டில் பெருமிதம்

ஹிந்து மதம் ஒப்பற்றது: பூஜாரிகள் மாநாட்டில் பெருமிதம்

மதுரை : ”ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்த ஒன்று. அனைத்து  தெய்வங்களையும் வணங் கும் பண்பாடு ஹிந்து மதத்தில் மட்டுமே பார்க்க  இயலும். பிற மத வழிபாட்டு தலங்களுக்கு சென்றும் ஹிந்துக்கள்  வழிபடுகின்றனர்.

ஹிந்து மதம் ஒப்பற்றது,” என மதுரையில் நடந்த பூஜாரிகள் மாநாட்டில் விஸ்வ  ஹிந்து பரிஷத் தென்மாவட்ட செயலாளர் ராம. சத்தியமூர்த்தி பெருமிதம்  கொண்டார்.நதிகளின் புனிதம் காக்கவும், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தவும் மதுரை புட்டுத்தோப்பில் அகில  பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா கடந்த ஜூலை 24ல்  துவங்கியது. நேற்று நடந்த பூஜாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மூன்றாவது  மாநில மாநாடு பூஜாரிகள் பேரமைப்பு மாநில துணை தலைவர் சக்திவேல்  தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தலைமை  அர்ச்சகர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் அர்ச்சகர் ராஜா பட்டர் துவக்கினர்.

ராம சத்தியமூர்த்தி பேசியதாவது: மேகாலயா, நாகலாந்து, வடகிழக்கு  மாநிலங்களில் அதிக ளவு மதமாற்றம் நடக்கிறது. அப்பகுதிகளில் ஹிந்து  கோயில்கள் அழிக்கப்பட்டு வருகிறது. நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷிகள்  வாழ்ந்த இந்திய பூமி என்பது கலாசாரம், தொன்மை யான வரலாற்று சிறப்பு  மிக்கது. உண்டியல் வருவாய் கோயில் அறப்பணிகளுக்கு செலவிடு வது  கிடையாது.ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்த ஒன்று. அனைத்து  தெய்வங்களையும் வணங்கும் பண்பாடு ஹிந்து மதத்தில் மட்டுமே பார்க்க  இயலும். பிற மத வழிபாட்டு தலங் களுக்கு சென்றும் ஹிந்துக்கள்  வழிபடுகின்றனர்.

ஹிந்து மதம் ஒப்பற்றது, என்றார்.சுவாமிகள் சிவானந்த சுந்தரானந்தா,  ராமானந்தா, செண்ட லங்கார செண்பக ஜீயர், சின்மயா மிஷன் சிவயோனந்தா,  மருதாசலஅடிகளார், குமரகுருபரர், ஆத்மானந்தா, திருபாத, வேதாந்த ஆனந்தா,  நிர்வாகிகள் மூர்த்தி, தியாகராஜன், கோபால் ரத்தினம், நாகராஜன், ராஜா,  கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !