உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை பாதுகாப்பு ஆலோசனை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை பாதுகாப்பு ஆலோசனை

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை யொட்டி பக்தர் களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். ஆனைமலை தாசில்தார் வெங்க டாசலம், மாசாணியம்மன் கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன்,  ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் தீயணைப் புத்துறை  உள்ளளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது:ஆடி அமாவாசையொட்டி, உள்ளூர் மட்டுமின்றி  வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு  அதிகளவு வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான  வசதிகளை மேம்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதி,  குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக் களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் பஸ்கள் நிறுத்தம் செய்ய வேண்டும். போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.பக்தர்கள் வசதிக்காக, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.  

தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருக்க  வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, ஆடி  அமாவாசைக்கு வழக்கத்தை விட, பக்தர் கூட்டம் மிக அதிகளவில் இருக்கும்.  ஆடி அமாவாசை வழிபாடு நாளை (31ம் தேதி) வருகிறது. இந்நிலையில்,  பக்தர்களின் வசதிக்காக, இன்று (30ம் தேதி) இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்க  போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு கூட்டம் அதிகரிக்கும் என  எதிர்பார்கப்படுவதால், 75 பஸ்கள் வரை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ஜோதி மணிகண்டன் கூறுகையில்,  ’இன்று (30ம் தேதி) இரவு முதல் பக்தர்கள் கூட்டம் வரத் துவங்கும். மாலை,  6:45 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடையும் மதுரை - பாலக்காடு அமிர்தா  எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக கூட்டம் வரும். அவர்கள் வசதிக்காக, ரயில்வே  ஸ்டேஷனுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் வருகையை அனுசரித்து,  30ம் தேதி இரவு; 31ம் தேதி பகல் மற்றும் இரவு முழுக்க சிறப்பு பஸ்கள் இயக்க  திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !