உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு

வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு

வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ  பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி  கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஆடி மாத முதல் பிரதோஷ  வழிபாடு நேற்று (ஜூலை., 29ல்) மாலை நடந்தது.நேற்று (ஜூலை., 29ல்) மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், தயிர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது.

தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.அதன் பின், ரிஷப வாகனத் தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !