உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை

சிவகங்கையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை

சிவகங்கை : சிவகங்கையில் போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள துளசி மகால்  பஜனை மட ராமர் கோயில் கட்டடத்தை ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நுாதன ஆலயமாக கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா  சிவகங்கை நகர் பிராமண சமாஜம் சார்பில் திருப்பணிக் குழுத்தலைவர்  ஆர்.கண்ணன் தலைமையில் நடந்தது.

பிராமண சமாஜம் தலைவர் எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை  மற்றும் கட்டட திருப்பணிகளை கிரிஜா மோகன்ராம், ரகோத்தமன், பொறியாளர்  சேகர் துவக்கி வைத்தனர். முன்னதாக நவசக்தி விநாயகருக்கு கணபதி  ஹோமம்,, நவக்கிரக, வாஸ்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !